உங்களுக்கு தெரியுமா: வைரம் எப்படி உருவாகிறது?
இந்த வைரமானது இந்தியாவில் முதன் முதலில் ஆந்திராவில் உள்ள கோல்கொண்டா என்ற இடத்திற்கு அருகில் இருக்கும் வஜ்ரகரூரில் கண்டிபிடிக்கப்பட்டது.
இந்த வைரத்தின் பெயர் கோகினூர், இதனுடைய எடை 105.80 காரட்டுகள் ஆகும்.
பொதுவாக வைரங்கள் நிறமற்ற வெள்ளை, மஞ்சள், பிரவுன், கிரே பச்சை, ஆரஞ்சு, பிங்க், நீலம், வெளிர்பச்சை மற்றும் முழுமையான கருமை போன்ற நிறங்களில் காணப்படுகின்றது.
வைரம் தன் மீது பாயும் 85 சதவீதம் ஒளியை பல கோணங்களில் பிரதிபலித்து திரும்பவும் வெளியில் அந்த ஒளியை அனுப்பி விடுகிறது இதனால் வைரம் எப்போதும் அழகாக ஜொலிக்கிறது.
வைரம் எப்படி உருவாகிறது?
பூமியின் மேற்பரப்பில் இருந்து, 150 – 200 கிலோமீட்டர் ஆழத்தில், 1200 – 1800 டிகிரி சென்டி கிரேடு வெப்பம் தொடர்ச்சியாக இருந்து கொண்டிருக்கிறது.
இதனால் அந்த இடத்தில் காணப்படும் சுத்தமான கார்பன் மூலக்கூறுகளால் வைரம் உருவாகிறது.