ரஸ்யா உக்ரைன்மீது மிகப்பெரியவான் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
உக்ரைனிற்கு எதிரான போர் ஆரம்பமானபின்னர்ரஸ்யா மேற்கொண்டு;ள்ள மிகப்பெரிய வான்தாக்குதல் இது என உக்ரைனின்இராணுவ வட்டாரங்கள்சிஎன்என்னிற்கு தெரிவித்துள்ளன.
உக்ரைன் மீது முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு ரஸ்யா மேற்கொண்டுள்ள ஆளில்லா விமான மற்றும் ஏவுகணை தாக்குதல்களில் 12 பேர் பலியாகியுள்ளனர்.
வெள்ளிக்கிழமை இரவு முதல் தாக்குதல்கள் இடம்பெறுவதாகவும் உக்ரைன் தலைநகரும் ஏனைய முக்கிய நகரங்களும் தாக்குதலிற்குள்ளாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீண்ட காலத்தின் பின்னர் எங்கள் கண்காணிப்புகளில் அனைத்து பிரதேசங்களிலும் அனைத்து பகுதிகளிலும் ரஸ்யாவின் தாக்குதலை காண்கின்றோம் என உக்ரைனின் இராணுவ அதிகாரிதெரிவித்துள்ளார்.
உக்ரைனின் தலைநகரையும் கிழக்கு மேற்கு தெற்கு பகுதிகளை இலக்கு வைப்பதற்காக ரஸ்யா 158 ஆளில்லா விமானங்களையும் ஏவுகணைகளையும் பயன்படுத்தியுள்ளது என உக்ரைன் தெரிவித்துள்ளது.
எதிரி மிகவும் வலுவாக தாக்கியுள்ளான் சிலவற்றை வீழ்த்தியுள்ளோம் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன என உக்ரைன் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன்தலைநகரில் புகையிரதநிலையமொன்றை ரஸ்யா இலக்குவைத்ததில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் 20 பேர் காயமடைந்துள்ளனர்.