உக்ரைனில் கடந்த 9 நாட்களாக கடுமையான தாக்குதலை மேற்கொண்டு வந்த ரஷ்யா தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன.
இருதரப்பு மோதலில் பலர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, உக்ரைன் தரப்பில் பாதுகாப்பு படையினர், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலால், அந்நாட்டில் தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் பலர் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது.
கடும் சவால்களை கடந்து அயல் நாடுகளுக்கு உக்ரைனில் இருந்து பலர் நடந்து செல்லும் நிலையும் ஏற்பட்டது இந்த நிலையில், மீட்பு பணிக்காக உக்ரைன் மீதான போரை தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
மனிதாபிமான அடிப்படையில் இந்த தற்காலிக போர் நிறுத்தம் செய்யப்படுவதாக ரஷ்ய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாய்ப்பு மூலம் உக்ரைனில் சிக்கி தவிக்கும் பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் நாடு திரும்ப வழி ஏற்பட்டுள்ளது. இன்று காலை 11.30 மணியில் இருந்து போர் நிறுத்தம் அமுலுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]