உக்ரைனில் உள்ள இந்தியர்கள் மற்றும் மாணவர்கள் உடனடியாக வெளியேறுமாறு, அங்குள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கும் என்ற அச்சுறுத்தல் காரணமாக பதற்றமான சூழல் நிலவுகிறது.
இதனால், பல்வேறு உலக நாடுகள் உக்ரைனில் இருந்து தங்கள் நாட்டு தூதரக அதிகாரிகள் மற்றும் மக்களை வெளியேற்றி வருகின்றன.
இந்நிலையில், உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அத்தியாவசியம் இன்றி இந்திய பிரஜைகள் மற்றும் மாணவர்கள் யாரும் உக்ரைனில் இருக்க வேண்டாம் என்றும், தற்காலிகமாக உக்ரைனைவிட்டு வெளியேறுமாறும் அறிவுறுத்தியுள்ளது.
உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் உள்ள இந்திய தூதரகம் தொடர்ந்து செயல்படும் என்றும், உக்ரைனை விட்டு வெளியேற விரும்பு இந்தியர்கள் தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாறும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைனும் அதன் அண்டை நாடான ரஷ்யாவும் நீண்டகாலமாக மோதி வருகின்றன.
உக்ரைனை நேட்மோ அமைப்பில் சேர்க்ககூடாது என்;கிற ரஷ்யாவின் கோரிக்கையை அமெரிக்கா மற்றும் நேட்டோ அமைப்பு நிராகத்து விட்டன.
இதன் காரணமாக இந்த மோதல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷ்யா ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட படைவீரர்களை குவித்துள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
ரஷ்யா எந்த நேரத்திலும் வான் வழி தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் குரல் கொடுப்பதுடன் இராணுவ வீரர்களையும் போர் விமானங்களையும் அனுப்பி வருகின்றன. இதனால் அங்கு போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
உக்ரைனில் இருந்து 25 கிலோமீற்றர் முதல் 45 கிலோமீற்றர் வரை இராணுவத்தை ரஷ்யா குவித்து வருகிறது.
இவை அனைத்தையும் காட்டிலும் மேற்கு ரஷ்யாவிலும் அதிக படியான இராணுவம் குவிக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக ரஷ்யா தங்கள் நாட்டின் மீது எந்த நேரமும் தாக்குதல் நடத்தக்கூடும் என உன்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து பல்வேறு நாடுகள் உக்ரைனில் இருந்து உடனே வெளியேறும்படி தங்கள் குடிமக்களை கேட்டுக்கொண்டுள்ளன.
அவுஸ்திரேலியா, இத்தாலி, இஸ்ரேல், நெதர்லாந்து, ஜப்பான் உள்ளிட்ட 10 நாடுகள் தங்கள் மக்களை உக்ரைனில் இருந்து வெளியேற்ற தொடங்கி உள்ளன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்கா அதிபர் ஜோ பைடனும் உக்ரைனில் வசித்து வரும் அமெரிக்கர்களை உடனயாக உக்ரைனை விட்டு வெளியேறுமாறு கூறியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளும் உக்ரைனில் வசிக்கும் தங்கள் நாட்டு மக்களை அந்நாட்டை வெளியேறுமாறு கூறிவிருகின்றன.
மேலும் உக்ரைனிலுள்ள பல தூதரகங்களும் போர்ச்சூழல் காரணமாக மூடப்பட்டு வருகின்றன.
ரஷ்யா-உக்ரைன் நாடுகளுக்கு இடையே போர் மூண்டால் அகதிகளாக்கப்படும் மக்களை ஏற்பதற்கான முன்னேற்பாடுகளை போலந்து அரசு மேற்கொண்டு வருவதாக போலந்து துணை வெளியுறவுத்துறை அமைச்சர் மந்தரி மார்ஸின் பிரசிடாக்ஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் இதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் முற்னேற்பாடு திட்டங்களை போலந்து உள்துறை அமைச்சகம் பல வாரங்களுக்கு முன்பே தொடங்கி செயல்பட்டு வருகிறது எனவும் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் மந்தரி மார்ஸின் பிரசிடாக்ஸ் கூறியிருந்தார்.
அமெரிக்காவும் தனது படைவீரர்கள் மூலம் அகதிகளுக்காக போலந்து அரசுக்கு உதவ இருப்பதாக பெண்டகனின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
இதேவேளை நேற்று வெள்ளை மாளிகையில் கருத்து வெளியிட்ட அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்,
“உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலுக்கு தீர்க்கமான பதிலடி கொடுக்க நாங்கள் தயாராக உள்ளோம், உக்ரைனில் உள்ள அமெரிக்கர்களை ரஷ்யா குறிவைத்தால், நாங்கள் ரஷ்யாவுடன் நேரடி மோதலை நாடவில்லை என்றாலும், நாங்கள் கடுமையாக பதிலடி கொடுப்போம்” என்று எச்சரித்துள்ளார்.
இந்த நிலையில், ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக தற்காத்துக் கொள்வதற்காக உக்ரைனுக்கு இராணுவ ஆயுதங்களை அனுப்புவதாகவும், 500 மில்லியன் டொலர்களை கடனாக வழங்குவதாகவும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.
இதேவேளை, ஏவுகணைகளை நிறுத்துவதற்கான வரம்புகள் மற்றும் இராணுவ வெளிப்படைத்தன்மை குறித்து அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா தயாராகவுள்ளதாக விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ரஷ்யாவுடன் போர் மூளும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், உக்ரைன் இளைஞர்கள் அந்நாட்டு வீரர்களுக்காக பதுங்கு குழிகளை தோண்டி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]