உக்ரேன்-ரஷ்யா நெருக்கடியால் உலகெங்கிலும் எண்ணெய் விநியோகம் தடைபடும் என்ற அச்சத்தில் எண்ணெய் விலை அதிகரித்த வகையில் உள்ளது.
சர்வதேச அளவுகோலான கச்சா எண்ணெய்யின் விலை, செவ்வாயன்று பேரலுக்கு 99.38 அமெரிக்க டொலர் (£73) கணக்கில் அதிகரித்துள்ளது.
லண்டனில், FTSE 100 பங்குச் சுட்டெண் 1.4%க்கும் அதிகமாகக் குறைவடையத் தொடங்கியது.
ஆசிய பங்குச் சந்தைகள் சரிவுடன் முடிவடைந்தன, மேலும் அமெரிக்க பங்குச் சந்தைகள் நஷ்டத்தை சந்தித்தன.
சவுதி அரேபியாவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய எண்ணெய் ஏற்றுமதியாளராக இருக்கும் ரஷ்யா மீது இங்கிலாந்து மற்றும் பல மேற்கத்திய நட்பு நாடுகள் பொருளாதாரத் தடைகளை அச்சுறுத்தல் விடுத்துள்ளன.
உக்ரேனின் கிழக்கில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள இரண்டு பகுதிகளை சுதந்திர நாடுகளாக அங்கீகரித்த பின்னர், ரஷ்யா வீரர்களை அனுப்ப உத்தரவிட்டது.
டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் மக்கள் குடியரசுகளில் தனது படைகள் அமைதி காக்கும் பணியில் ஈடுபடும் என ரஷ்யா கூறியுள்ளது.
ஆனால் அவர்களை அமைதி காக்கும் படையினர் என்று அழைப்பது “முட்டாள்தனம்” என்றும், ரஷ்யா போருக்கான சாக்குப்போக்கை உருவாக்குவதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]