உக்ரேன் நெருக்கடி தொடர்பான உச்சிமாநாட்டிற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும் கொள்கையளவில் ஒப்புக்கொண்டுள்ளனர் என்று பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஐரோப்பாவில் பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஸ்திரத்தன்மை பற்றிய உச்சிமாநாட்டில் மக்ரோன் இரு தலைவர்களுக்கும் இது தொடர்பில் அழைப்பு விடுத்ததாக எலிசி அரண்மனை கூறியதாக பிரெஞ்சு ஜனாதிபதி அலுவலகம் திங்கட்கிழமை அதிகாலை வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஜனாதிபதிகளான ஜோ பைடன் மற்றும் விளாடிமிர் புட்டின் இருவரும் அத்தகைய உச்சிமாநாட்டின் கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ளனர் என்றும் அந்த அறிக்கை கூறியது. இந்த தகவலை வெள்ளை மாளிகை பின்னர் உறுதி செய்தது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]