ரஷ்ய படைகளின் தாக்குதலுக்கு உள்ளாகி வரும் உக்ரேனின் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொலைபேசி வாயிலாக உரையாடினார்.
இந்த பேச்சு வார்த்ததையில்,
வடகிழக்கு உக்ரேனின் முக்கிய நகரமான சுமி நகரில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்க உதவி செய்யுமாறு உக்ரேன் ஜனாதிபதியிடம் பிரதமர் மோடி வேண்டுகோள் வைத்துள்ளார்.
ரஷ்ய – உக்ரேன் படைகளுக்கு இடையே கடும் சண்டை நடைபெற்று வரும் சுமி நகரில் மட்டும் சுமார் 700 இந்திய மாணவர்கள் சிக்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரு தலைவர்களுக்கு இடையேயான பேச்சு 35 நிமிடம் நீடித்ததாகவும், கடுமையான போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் உக்ரைனிலிருந்து இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்ற உதவி செய்தமைக்காக, உக்ரேன் அரசுக்கு தனது நன்றியையும் மோடி தெரிவித்துக் கொண்டார்.
மேலும், உக்ரேனின் சுமி நகரில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க தொடர்ந்து உதவுமாறு உக்ரேன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை இந்திய பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.
மேலும், உக்ரேனில் தற்போது நிலவும் சூழலை சீரமைப்பது தொடர்பாகவும் இரு தலைவர்களும் பேசியதாகவும் கூறப்படுகிறது.
உக்ரேன் மீது ரஷ்ய படைகள் போர்தொடுத்த பிறகு, பிரதமர் மோடி, உக்ரேன் ஜனாதிபதி இடையே நடைபெறும் இரண்டாவது தொலைபேசி உரையாடல் என்பது குறிப்பிடத்தக்கது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]