ரஷ்யாவின் படையெடுப்பினை எதிர்கொள்ளும் துணிச்சல் மற்றும் தைரியத்துக்காக உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கு மிக உயர்ந்த அரச விருதை வழங்க செக் குடியரசு முடிவு செய்துள்ளதாக அந் நாட்டு ஜனாதிபதி மிலோஸ் ஜெமான் திங்களன்று தெரிவித்துள்ளார்.
ஒக்டோபர் இறுதியில் செக் குடியரசின் அரச விருது வழங்கும் விழா நடைபெறும் போது உக்ரேன் ஜனாதிபதிக்கு விருது வழங்கப்படலாம் என்று கூறப்படுகின்றது.
மிலோஸ் ஜெமான் 2013 இல் பதவியேற்றதிலிருந்து ரஷ்யாவுடன் நெருக்கமான உறவுகளை கொண்டுள்ளார். ஆனால் பெப்ரவரி 24 அன்று உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிலிருந்து ரஷ்ய ஜனாதிபதி புட்டினை அவர் விமர்சித்து வருகிறார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]