உக்ரேன் நாட்டின் மீது ரஷ்யா கடந்த பெப்ரவரி 24 ஆம் திகதி போர் நடத்த ஆரம்பபித்தது. அந்தப் போர் தற்போது வரை தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், உக்ரேன் புச்சா படுகொலை சம்பவம் தொடர்புடைய வீரர்களை ரஷ்ய ஜனாதிபதி புடின் கௌரவித்ததாக செய்தி வாசித்த ஜப்பானிய பெண் செய்தியாளர் நேரலையில் விரக்தி தாங்க முடியாமல் கண்ணீர் விட்ட வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
Yumiko Matsuo என்ற பெண் செய்தியாளர் புச்சா படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய வீரர்களை, நாட்டின் முன்மாதிரி என அதிபர் புடின் கௌரவித்ததாக கூறிய போது உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டார்.
பதுங்கு குழிகளில் அதிகளவிலான மக்கள் சிக்கி உள்ளதாக நேரலையில் தெரிவித்த செய்தியாளர், சட்டென இடைமறித்து மன்னிப்புக் கோரினார். வீடியோ இணையத்தில் வெளியான நிலையில் வேகமாக பரவி வருகிறது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]