உக்ரேனில் நிலவும் நெருக்கடியான சூழ்நிலையையடுத்து அங்கு வசிக்கும் இலங்கையர்கள் தொடர்பில் தொடர்ச்சியான அவதானத்தை செலுத்தி வருவதாக வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.
அவசர நிலைமைகள் ஏற்படுமானால் அவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளும் எனவும் வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.
உக்ரேனில் நெருக்கடி நிலை தோன்றியுள்ள நிலையில் சர்வதேச நாடுகளிலிருந்து பல்வேறு காரணங்களுக்காக அங்கு தங்கியுள்ளவர்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கு உரிய அறிவுறுத்தல்களை அந்தந்த நாடுகள் வழங்கியுள்ளன.
அதற்கிணங்க அந்த நாட்டில் இலங்கையர்கள் 42 பேர் வசிப்பதுடன் அவர்களின் ஏழு பேர் மாணவர்கள் என்றும் அவர்களுக்கு எந்தவித சிக்கல்களும் கிடையாது என்பதையும் வெளிநாட்டு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
உக்ரேனில் இலங்கை தூதுவராலயம் இல்லாதபோதும் துருக்கியின் அக்காறா பிரதேசத்திலுள்ள தூதுவராலயத்தின் ஊடாக தேவையான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் வெளிநாட்டு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]