ஈழ மண்ணின் பெருமையாக திரு சுபாஸ்கரன் அவர்கள் விளங்குகிறார்கள். அதனை நினைக்க பெருமையாக இருக்கின்றது. அவருக்கு ஒரு ஈழத் தமிழனாக என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்வடைகிறேன்.
அண்மையில் இந்தியன் 2 படத்தின் பாடல் வெளியீடு நிகழ்வைப் பார்த்தேன். அதில் பேசிய உலக நாயகன் கமலஹாசன், பல்வேறு நெருக்கடி கடந்து இந்தப் படத்தை எடுக்க லைக்கா சுபாஸ்கரன் துணை நின்றதாக கூறினார்.
அத்துடன் அந்த துணைநிற்றல் என்பது திரு சுபாஸ்கரன் பிறந்த மண்ணின் வீரம் என்று பேசியது என்னைப் போன்ற உலகத் தமிழர்களுக்கு மகிழ்வும் பெருமையும் தந்த விசயமாகும்.
தன் உழைப்பினாலும் முயற்சியினாலும் சிறந்த எண்ணங்களினாலும் உலக அரங்கில் ஒரு நாயகனாக பேசப்படும் சுபாஸ்கரன் இன்னமும் சிகரங்களைத் தொட என் மனம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஊடகப் போராளி கிருபா பிள்ளை