ஈரோட்டில் நடைபெற உள்ள மண்டல மாநாட்டில் திமுக தலைவர் கருணாநிதி கலந்துகொள்ள மாட்டார் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
மேலும், உள்ளாட்சித் தேர்தல் நடக்காமலிருப்பதற்கு திமுகதான் காரணம் என அதிமுக கூறுவதை ஏற்று கொள்ள முடியாது என்று தி.மு.க செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
திமுக மாநாட்டுக்கு தொண்டர்களை அழைக்கும் விதமாக திமுக தலைவர் கருணாநிதியின் வாய்ஸ், தொலைக்காட்சி ஊடகங்களில் வெளியிடப்பட்டு வரும் நிலையில், திமுக தலைவர் கருணாநிதியும் ஈரோடு மண்டல மாநாட்டில் கலந்துகொள்வார் என எதிர்பார்ப்பு திமுகவினரிடையே ஏற்பட்டது.
இந்நிலையில், திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது,
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான முயற்சிகள் எடுக்காமல், தமிழக அரசு மத்திய அரசிடம் வேண்டுதல் விடுத்து வருகின்றது. இது கண்டிக்கத்தக்கது என்றும், உள்ளாட்சி தேர்தல் தாமதத்திற்கு திமுக தான் காரணம் என்று பழி சுமத்தி வருகிறது. ஆனால், தமிழக அரசுக்குத்தான் உள்ளாட்சி தேர்தல்ர நடத்தும் எண்ணம் இல்லை என்றும், உள்ளாட்சி தேர்தல் தாமதத்திற்கு திமுகதான் காரணம் என அதிமுக கூறுவதை ஏற்று கொள்ள முடியாது என்றும் கூறினார்.
மேலும், ஈரோட்டில் நடைபெற இருக்கும் மண்ட மாநாடு மாநில மாநாட்டை மிஞ்சும் வகையில் இருக்கும் எனவும் இந்த மாநாட்டில் திமுக தலைவர் கருணாநிதி கலந்துக் கொள்ள மாட்டார் எனவும் ஸ்டாலின் கூறினார்.