ஈரானின் மேற்கு, கிழக்குப் பகுதிகளில்
அடுத்தடுத்து 8 மிதமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
‘ஈரானின் மேற்குப் பகுதியிலுள்ள எல்லைப்புறத்தில் கெர்மன்ஷா மாகாணத்தில் நேற்று அடுத்தத்தடுத்து மிதமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. காலை 10:29 மணிக்கு ரிக்டர் அளவில் 5.4ஆக பதிவாகியது. தென் பகுதியிலுள்ள கெர்மன் மாகாணத்தில் 5.1ஆக நிலநடுக்கம் பதிவாகியது. மற்ற இடங்களில் ரிக்டர் அளவு 5 ஆக பதிவாகியது.
நிலநடுக்க பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் மீட்புப் பணி வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். எனினும் பாதிப்புகள் குறித்த தகவல் ஏதும் இதுவரை வெளிவரவில்லை.
ஈரான,ஈராக் எல்லையில் நவம்பரில் ரிக்டர் அளவில் 7.3ஆக பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு 620 பேர் பலியாகினர்.