ஈரானின் மத்திய மாகாணமான இஸ்ஃபாஹானில் அமைந்துள்ள இரசாயன மற்றும் பட்டாசு தொழிற்சாலையொன்றில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வெடிப்புச் சம்பவம் பதிவாகியுள்ளது.
இதனால் குறைந்தது 9 பேர் காயமடைந்ததாக ஈரானிய அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெடிப்புக்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ள நிலையில் காயமடைந்த ஒன்பது பேரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்று மாகாணத்தின் மருத்துவ அவசர மையத்தின் செய்தித் தொடர்பாளர் அப்பாஸ் அபேடியை மேற்கோள் காட்டி மெஹ்ர் அரச செய்தி நிறுவனம் கூறியுள்ளது.