இஸ்ரேல் – பாலஸ்தீன் மோதலில் ஐக்கிய நாடுகள் இரட்டை நிலைப்பாட்டை வகிக்க வேண்டாம் எனவும் மனித உரிமை எங்கே எனத் தெரிவித்தும் புதிய மக்கள் முன்னணி இன்று வெள்ளிக்கிழமை (13) கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் காரியாலயத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு கோஷங்கள் எழுதப்பட்ட சுலோகங்களை ஏந்தியவாறும் ஆர்ப்பாட்டத்தின் பின்னர் மகஜரொன்றையும் கையளித்தனர்.





