இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது.
இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தில் செயல்படும் ஆயுதக்குழுக்கள் ரொக்கெட்களை வீசி தாக்குதல் நடத்தின.
முதல் தாக்குதல் நடத்திய 20 நிமிடங்களில் 5 ஆயிரம் ரொக்கெட்களை வீசியதாக அந்த குழுக்கள் தெரிவித்துள்ளன.
தரை வழியாகவும், கடல் வழியாகவும் இஸ்ரேலுக்குள் நுழைந்து நடத்தப்பட்ட தாக்குதலில், இஸ்ரேலைச் சேர்ந்த பெண் உட்பட 6 பேர் உயிரிழந்தார். 545 பேர் காயம் அடைந்துள்ளனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேலும் விமானப்படை விமானங்கள் மூலம் காசா நகரில் தாக்குதலை ஆரம்பித்துள்ளது.
இதனால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. போரில் இஸ்ரேல் வெற்றி பெறும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனத்தில் செயல்படும் ஹமாஸ் உள்ளிட்ட ஆயுதக்குழுவினர் காசா முனையில் இருந்து இஸ்ரேல் மீது ரொக்கெட்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
இஸ்ரேலுக்கு எதிராக போரை ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ள அந்த அமைப்பினர், தங்களது நடவடிக்கைக்கு ‛ ஆபரேஷன் அல் அக்சா பிளட்’ என்ற பெயர் சூட்டி உள்ளனர்.
முதல் தாக்குதல் நடத்திய 20 நிமிடங்களில் 5 ஆயிரம் ரொக்கெட்களை ஏவியதாகவும் தெரிவித்துள்ளன.
இஸ்ரேலின் அனைத்து ஆக்கிரமிப்புகளுக்கு முடிவு கட்டுவோம் எனவும் இந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.
ஏராளமான கட்டடங்கள், கார்கள், பஸ்கள் தீப்பிடித்து எரிந்தன. அதனை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
ரொக்கெட் வீச்சால், பல கட்டடங்கள் சேதம் அடைந்துள்ளன. பல இடங்களில் ராக்கெட் விழும் சத்தம் கேட்டது. மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. தாக்குதல் குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இஸ்ரேலின் முக்கிய நகரமான டெல் அவிவ், அஷ்க்கெலான் உள்ளிட்ட நகரங்களிலும் ரொக்கெட் மூலம் ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இந்நகரில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது.
ஜெருசலேம் நகர் முழுவதும் சைரன் ஒலித்தபடி உள்ளது. மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அரசு அறிவுறுத்தி உள்ளது. அந்த நகரில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது
இதனையடுத்து, போருக்கு தயாராக உள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலுக்குள் ஊடுருவ முயற்சி செய்ததாக குற்றம்சாட்டி உள்ள இஸ்ரேல் பாதுகாப்பு படையினர், பாராகிளைடர்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. சாலைகளில் சென்ற கார்களும் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளன.
உத்தரவு பிறப்பிக்கப்பட்ட உடன் காசா, பாலஸ்தீனத்தை நோக்கி முன்னேற இஸ்ரேல் ராணுவம் வியூகம் வகுத்து வருகிறது.
காசாவைத் தொடர்ந்து பாலஸ்தீனத்தின் மீதும் விமானப்படை விமானங்கள் மூலம் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதாக தெரியவந்துள்ளது.
இஸ்ரேலை மற்ற நாடுகளுடன் இணைக்கும் சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது.
இதனிடையே ஜெருசலேமில் உள்ள அல் அக்சா மசூதியில் கடந்த 5 நாட்களாக இஸ்ரேலியர்கள் தங்கி உள்ளதாகவும், அவர்களுக்கு துணையாக இராணுவமும் நுழைந்துள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் வெளியேறாத காரணத்தினால் ஹமாஸ் அமைப்பினர் தாக்குதலை துவக்கி உள்ளதாக தெரிகிறது.
இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் என்பதால், அச்சம் அடைந்துள்ள பாலஸ்தீனியர்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி வெளியேறி வருகின்றனர்.
இஸ்ரேலின் தெற்கு பகுதியில் கடல் வழியாகவும், தரை வழியாகவும் ஊடுருவிய ஹமாஸ் குழுவினர் தாக்குதலில் ஈடுபட்டனர் .
இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் 35 பேரை ஹமாஸ் குழுவினர் பிணைக்கைதிகளாக பிடித்து சென்றனர்.
காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பினரின் மறைவிடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் குழுவினரை பிடிக்கவும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இஸ்ரேலில் 7 நகரங்களில் ஹமாஸ் குழுவினர் நுழைந்துள்ளனர். அவர்களுடன் இஸ்ரேல் இராணுவத்தினர் மோதலில் ஈடுபட்டனர்.
ஜெருசலேமில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது. மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி மேயர் அறிவுறுத்தி உள்ளார். நகர் முழுவதும் சைரன் ஒலிக்கப்படுகிறது.
இராணுவ வீரர்கள் தங்கள் நிலைகளுக்கு உடனடியாக திரும்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
ஹமாஸ் குழுவினருக்கு பதிலடி கொடுப்பது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹூ, அமைச்சர்கள், ராணுவத்தினருடன் ரகசிய இடத்தில் ஆலோசனை நடத்தினார்.
இஸ்ரேல் மக்கள் போரை எதிர் கொண்டுள்ளதாகவும், ஹமாஸ் குழுவினருக்கு எதிரான போரில் வெற்றி பெறுவோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹூ கூறியுள்ளார். எதிரிகள் சிந்தித்து பார்க்க முடியாதபடி பதிலடி கொடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
பாலஸ்தீனத்தை விடுவிக்க இதுவே சரியான தருணம். இஸ்ரேலை அழித்து ஒழிப்போம். பாலஸ்தீனியர்கள் ஆயுதங்களுடன் இஸ்ரேலை நோக்கி முன்னேற வேண்டும் என ஹமாஸ் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
காசாவில் 16 டன் வெடிபொருட்களை இஸ்ரேலிய இராணுவம் வீசியுள்ளது.
இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.