மேற்காசிய நாடான இஸ்ரேலில், ஊழல் வழக்கில் சிக்கியுள்ள பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, கடந்த சில வாரங்களாக, போராட்டங்கள் நடந்து வருகின்றன.
ஜெருசலேமில் உள்ள பிரதமர் இல்லத்திற்கு அருகே, நேற்று இரவு, ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, போலீசார், அவர்கள் மீது தண்ணீரை அடித்து கலைத்தனர்.
55 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால், அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.