ஈரானில், சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்கு, மருத்துவ உதவி அளிப்பதாக, இஸ்ரேல் கூறியதை, ஈரான் அரசு நிராகரித்தது.
மேற்காசிய நாடுகளில் ஒன்றான, ஈரானில், சமீபத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்துக்கு, 500 பேர் பலியாகினர். ஏராளமான கட்டடங்கள் சரிந்து விழுந்ததால், ஆயிரக்கணக்கானோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் இஸ்ரேல், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஈரானியர்களுக்கு, மருத்துவ உதவி அளிப்பதாக கூறியது.
இது குறித்து, இஸ்ரேல் பிரதமர், நேதன்யாஹு கூறுகையில், ”ஈரானில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டோரின் புகைப்படங்கள், நெஞ்சை உலுக்குவதாக இருந்தன. பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவ உதவிகள் அளிக்க உத்தரவிட்டு உள்ளேன்,” என்றார்.
ஆனால், இஸ்ரேலின் உதவியை, ஈரான் அரசு நிராகரித்து விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.