பரிசில் மிகப்பெரும் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த பயங்கரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளான். இதனால் தாக்குதல் ஒன்று முறியடிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடுப்புப்பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட குறித்த நபர், இஸ்லாமிய தேச பயங்கரவாதிகளுடன் நேரடி தொடர்பில் இருந்ததாகவும், அவனது வீட்டில் மிக ஆபத்தான வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டதாகவும் அறியமுடிகிறது. பரிசில் எந்த இடத்தினை தாக்க திட்டமிட்டிருந்தான் என்பது குறித்த சரியான தகவல்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.
இவ்வார செவ்வாய்க்கிழமை குறித்த பயங்கரவாதி of Nimes (Gard) நகரில் வைத்து அவனது வீட்டில் கைது செய்யப்பட்டுள்ளான். வெடிபொருட்கள் தவிர, பல காணொளிகள் அடங்கிய கணனி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. அதில் இஸ்லாமிய தேச பயங்கரவாதிகளின் கொடி பின்னால் பறக்க, தாக்குதல் நடத்துவேன் போன்ற உறுதிமொழிகள் எடுக்கப்பட்டு அது பயங்கரவாதிகளுக்கு அனுப்பப்பட்டிருந்ததாகவும் அறிய முடிகிறது.
தவிர, இந்த வருடத்தில் தகர்க்கப்பட்ட முதல் பயங்கரவாத தாக்குதல் இதுவாகும். முன்னதாக, 2017 ஆம் ஆண்டில் 20 தாக்குதல் முறியடிக்கப்பட்டிருந்ததாக உள்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.