இவர் தான் ரியல் “Sleeping Beauty”- 64 நாட்கள் கழித்து எழுந்திருக்கும் அதிசய பெண்
ஒருமுறை உறங்கினால் 64 நாட்கள் கழித்து எழுந்திருக்கும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் நிக்கோல் என்ற பெண்.
கே.எல்.எஸ் அதாவது Kleine-Levin Syndrome (KLS) என்ற உறக்கம் சார்ந்த குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளார் நிக்கோல்.
பிறக்கும் போது மிக நார்மலாக இருந்த நிக்கோல், ஆறு வயதான போது 18 மணிநேரம் உறங்க ஆரம்பித்துள்ளார். அதுமட்டுமின்றி உறங்கி எழுந்தவுடன் தாய், உறவினர்களை அடையாம் காணவே சிரமப்பட்டுள்ளார்.
தனது 14வது Thanks Giving பார்ட்டியின் போது உறங்க ஆரம்பித்த நிக்கோல், ஜனவரி மாதமே எழும்பினாராம். பொதுவாக நிக்கோல் நீண்டநாள் உறங்க போகிறார் என்பதை அவருக்கு திடீரென வரும் தலைவலி மற்றும் மந்தமான நிலையை வைத்து அறிந்துக் கொள்ள முடியுமாம்.
இதுபோல இவர் உறங்கும் போது சராசரியாக 22-64 நாட்கள் வரை உறங்குவராம். இந்த இடைப்பட்ட நாட்களில் என்ன நடந்தது என்பது குறித்து நிக்கோலுக்கு ஒன்றுமே தெரியாது.
உலகில் ஆயிரத்தில் ஒருவருக்கு தான் இந்த குறைபாடு உள்ளது என்றும், மருத்துவத்தில் இதுவரை இதற்கு எந்தவொரு தீர்வும் இல்லை எனவும் மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.