இங்கே கொடி பிடிப்பதை விட்டுவிட்டு நாட்டுக்கு போங்கோ என சொல்லும் இந்த அடிப்படை அறிவிலிகள் , பேருக்காகவும் தமது பிழைப்புக்காகவும் , நிகழ்வுகளையும், சந்திப்புக்களையும் செய்துகொண்டு ,தமிழ் மக்களை ஏமாற்றி தமக்கான பிழைப்பை பார்த்துக்கொண்டு இருக்கும் இவர்கள் நாட்டுக்கு என்னசெய்தார்கள் .
2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் நாட்டில் என்ன நடந்தது என அறியாமல் மக்களை யாதுமறியாதவர்களாக நினைத்து தமது வியாபாரத்துக்காக நாலு பேர் முன் பேசும்போது பணம்பார்க்கும் கைங்கரியத்தை மட்டும் திட்டமிட்டு செய்கின்றனர் .
கொடி பிடிக்காது நாட்டுக்கு செல்லுங்கள் இலங்கை அரசாங்கம் சலுகைகளை தரும் என சொல்லும் இவருக்கு அடிப்படை அறிவே இல்லை என்றுதான் எண்ணத்தோன்றுகின்றது .
நாட்டில் இருக்க முடியாத உயிர் அச்சுறுத்தலுக்கு பயந்து எத்தனைபேர் நாடுவிட்டு நாடுவந்து வெயிலிலும் ,குளிரிலும் தவிக்கின்றனர் என்பதை இவர் அறிய வாய்ப்பில்லைத்தான் .காரணம் நாடு பற்றியும் அங்கு நடந்த உரிமைப்போராட்டம் பற்றியும் தெளிவாக புரிந்துகொள்ள கொஞ்சம் நாட்டு பற்றும் மொழிப் பற்றும் வேண்டும் அவை இல்லாமல் பணம் புரட்டும் இவர்களுக்கு,சிங்களவனிடம் போய் கையேந்து என்று கூறுவதை தவிர வேறென்ன சொல்ல தெரியும் .
இப்படியானவர்களை துரோகிகள் என்று சொல்லாமல் வேறு என்ன அடைமொழியால் அழைக்க முடியும் ?
மக்களையும் மக்கள் பணத்தையும் சுருட்ட இவர்கள் போடும் நாடகங்களுக்கு மக்களே ஏமாற வேண்டாம் .