இளையராஜாவை கவுரவிக்கும் விதமாக, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில், இளையராஜா 75 என்ற பாராட்டு நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்ற நடிகர் கமல்ஹாசன், தனது மகள் ஸ்ருதிஹாசன் உடன் இணைந்து மூன்று பாடல்களை பாடினார்.
சிவப்பு ரோஜாக்கள் படத்தில் இடம்பெற்ற, நினைவோ ஒரு பறவை, விரும்பாண்டி படத்திலிருந்து உன்ன விட இந்த உலகத்துல… மற்றும் ஹேராம் படத்திலிருந்து ராம் ராம் பாடல்களை பாடினார். ஒவ்வொரு பாடல்களின் போதும் சில சுவாரஸ்யமான நினைவுகளை கமலும், இளையராஜாவும் பகிர்ந்து கொண்டனர்.