சர்வதேச சர்வதேச இளைஞர் பௌத்த சங்க சபையின் 14 ஆவது வருடாந்த சம்மேளனத்தின் நிறைவு நாள் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.
மாத்தளை, மில்லவான மகா வித்தியாலயத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்றது.
உலகம் பூராகவும் காணப்படும் தேரவாத, மகாயான, தந்திரயான, வஜ்ரயான மற்றும் சென் பௌத்த மதப் பிரிவுகளை சேர்ந்த இளம் பிக்குமார் 1000 பேரின் பங்குபற்றுதலுடன் நடைபெறும் இந்த மாநாடு இலங்கையில் 3வது முறையாக நடைபெறுகின்றது.
ஒக்டோபர் 27 ஆம் திகதி ஆரம்பமான 14 வது வருடாந்த மாநாட்டின் நிகழ்வுகள், கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம், கண்டி பல்லேகல மாகாண சபை மாநாட்டு மண்டபம் என்பவற்றில் இடம்பெற்றன.
மில்லவான பிரதேசத்திற்கு அரச தலைவர் ஒருவர் சமூகமளித்த முதல் சந்தர்ப்பத்தை நினைவுகூரும் முகமாக மில்லவான மகா வித்தியாலயத்திற்கு சென்ற ஜனாதிபதியை மாணவர்கள் மிகுந்த ஆரவாரத்துடன் வரவேற்றனர்.
சியம் மகா நிக்காயவின் மல்வத்து பிரிவின் அநுநாயக்க வண. திபுல்கும்புரே விமலதர்ம தேரர் சமய அநுட்டானங்களை நிகழ்த்தியதுடன், உலக இளைஞர் பௌத்த சங்க சபையின் பொதுச் செயலாளர் வண. முகுனுவெல அனுருத்த தேரர் வரவேற்புரை ஆற்றினார்.
உலக பௌத்த சம்மேளனத்தின் தலைவர் Annga Zadu தேரரரும் இந்நிகழ்வில் உரையாற்றினார்.
இளைஞர் பௌத்த சங்க சபையின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுக்கு பரிசில்களும் இதன்போது ஜனாதிபதியினால் வழங்கப்பட்டன.
இந்த நிறைவு நிகழ்வில் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் அலுவிகார, தம்புல்லை ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் பிரியான் விஜேரத்ன உள்ளிடோர் கலந்துகொண்டனர்.