இளவரசி டயானாவின் கணவரான சார்லஸை கொல்ல சதி நடந்ததா?
பிரித்தானிய முன்னாள் இளவரசியான டயானாவின் மரணத்திற்கு பிறகு நடந்த இறுதி ஊர்வலத்தில் தன்னை யாராவது சுட்டு கொல்ல வாய்ப்புள்ளது என கணவரான சார்லஸ் அஞ்சியதாக தற்போது அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானிய இளவரசரான சார்லஸை விட்டு பிரிந்த பிறகு பாரீஸ் நகரில் நிகழ்ந்த கார் விபத்தில் இளவரசியான டயானா உயிரிழந்தார்.
எனினும், இந்த மரணத்திற்கு முன்னதாகவே இளவரசர் சார்லஸ் மீது பொதுமக்களுக்கு அதிருப்தியே நிலவி வந்துள்ளது.
இளவரசர் சார்லஸின் தற்போதைய மனைவியான கேமிலாவுடன் அவர் ரகசிய தொடர்பில் இருந்த காரணத்தினால் தான் டயானாவை விட்டு சார்லஸ் பிரிந்ததாக பொதுமக்கள் கருதினர்.
இச்சூழலில் கடந்த 1997ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ம் திகதி கார் விபத்தில் டயானா உயிரிழந்தார்.
பின்னர், டயானாவின் இறுதி ஊர்வலத்தில் இளவரசர் சார்லஸ் மற்றும் அவரது மகன்களான இளவரசர் வில்லியம், இளவரசர் ஹரி ஆகியோர் பங்கேற்றனர்.