யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சரணடைந்த நபர் இன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
கடந்த மாதம் 25 ஆம் திகதி யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் 39 வயதான சிவராசா ஜெயந்தன் என்ற சந்தேகநபர் சரணடைந்திருந்தார்.
குறித்த சந்தேகநபர் புனர்வாழ்வு பெறாத முன்னாள் போராளி என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியிருந்தனர்.
கடந்த மாதம் 22 ஆம் திகதி நல்லூர் ஆலய பின்வீதியில் நீதிபதி இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் பொலிஸ் சாஜனான சரத் ஹேமச்சந்திர என்ற மெய்பாதுகாவலர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.
கடந்த 2012ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கொலை சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர், பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.