இலத்திரனியல் துறையில் புரட்சியை ஏற்படுத்தக்கூடிய புதிய உலோகம் கண்டுபிடிப்பு!
இலத்திரனியல் சாதனங்களில் மின்னைக் கடத்துவதற்காகப் பயன்படுத்தப்படும் உலோகங்கள் பொதுவாக வெப்பம் அடையக்கூடியதாக காணப்படுகின்றன.
இவ்வாறு வெப்பம் அடைவதனால் மின்னோட்டம் மந்தமடைவதுடன், சாதனங்களும் பழுதடையக்கூடிய சாத்தியம் அதிகளவில் காணப்படுகின்றது.
எனவே இப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முகமாக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் தற்போது வெற்றி கிடைத்துள்ளது.
அதாவது உயர் வினைத்திறனுடன் மின்னைக் கடத்தக்கூடியதும், வெப்பம் அடையாதது இருக்கக்கூடியதுமான உலோகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனை அமெரிக்காவில் உள்ள Berkeley Lab’s Materials Sciences விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இக் கண்டுபிடிப்புக் குழுவுக்கு தலைமை வகித்த Junqiao Wu என்பவர் இது சற்றும் எதிர்பாராத விதமாக இடம்பெற்ற கண்டுபிடிப்பு என தெரிவித்துள்ளார்.
அதாவது வனேடியம் ஒக்சைட்டு என்ற உலோகத்தின் வெப்ப கடத்து திறன் பற்றி ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே இந்த தகவல் விஞ்ஞானிகளுக்கு கிடைத்துள்ளது.
இவ் உலோகத்தினைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் உயர் வினைத்திறன் கொண்ட அல்லது நீடித்து உழைக்கக்கூடிய இலத்திரனியல் சாதனங்களை உற்பத்தி செய்ய முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.