இலங்கையில் இடம்பெறவுள்ள இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடர்களில் ஆப்கானிஸ்தான் அணி விளையாடுவதற்கு தலிபான்கள் அனுமதி வழங்கியுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஆப்கானிஸ்தான் அணி இலங்கையில் விளையாடுவதில் தமக்கு எந்த வித ஆட்சேபனைகளும் இல்லையென தலிபான்கள் தெரிவித்துள்ளதாக பகிஸ்தான் கிரிக்கெட் சபை மேலும் தெரிவித்துள்ளது.
குறித்த போட்டித் தொடர்கள் குறித்து, தமது சகாக்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றுள்ளதாக பகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) மேலும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் 24 ஆம் திகதி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிகள் முடிந்தவுடன் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கான அணியை அறிவிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது ஆப்கானிஸ்தான் வீரர்கள் காபூலில் தமது பயிற்சியைத் தொடங்கியுள்ளனர்,
எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை பாகிஸ்தானின் லாகூரில் பயிற்சி முகாம் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ள நிலையில், ஆப்கானிஸ்தான் அணி பாகிஸ்தான் அணியுடன் 29 ஆம் திகதி இலங்கைக்கு பயணிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.