இலங்கையின் தேசிய விமான நிறுவனமான ஸ்ரீலங்கா ஏயர்லைன்ஸ் ஆறு வருட இடைவேளைக்கு பின்னர் ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவிற்க மீண்டும் நேரடி விமான சேவையை தொடங்கியுள்ளது.
அதன்படி மொஸ்கோவிலிருந்து புறப்பட்ட ஸ்ரீலங்கான் ஏயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று இன்று காலை நாட்டை வந்தடைந்தது.
மொஸ்கோவின்,டொமோடெடோவோ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்த விமானம் இன்று காலை 06.30 மணிக்கு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
இந்த விமானத்தில் ரஷ்யாவுக்கான இலங்கை தூதர் உட்பட 51 உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இருந்தனர்.
இதன்மூலம் 2015 முதல் இடைநிறுத்தப்பட்ட ரஷ்யாவுக்கான நேரடி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
297 ஆசனங்களுடன் ஏயர்பஸ் ஏ 330 கருவிகளைப் பயன்படுத்தி வாரத்திற்கு ஒரு முறை மொஸ்கோவிற்கு குறித்த விமான சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.
அதன்படி யு.எல் – 553 என்ற ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இரவு 10.20 மணிக்கு கொழும்பிலிருந்து புறப்பட்டு மொஸ்கோவின் டொமோடெடோவோ விமான நிலையத்தை அதிகாலை 04.30 மணியளவில் சென்றடையும்.
அதேநேரம் அங்கிருந்து சனிக்கிழமையன்று இரவு 07.15 மணிக்கு மீளத் திரும்பும் விமானம் ஞாயிற்றுக்கிழமை காலை 06.05 மணியளவில் கொழும்பில் தரையிறங்கும்.