புளும்பேர்க்
இலங்கை முற்பணம் செலுத்தினால் மாத்திரமே இந்தியா எரிபொருளை வழங்கதயாராகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கைக்கு வழங்கிய கடன்கள் முடிவடைந்துள்ள நிலையில் இலங்கைக்கு எரிபொருளை வழங்கவேண்டும் என்றால் முற்பணம் செலுத்தப்படவேண்டும் என இந்தியா தெரிவித்துள்ளதாக இந்த விடயம் குறித்து அறிந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
தனது மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கையிடம்எரிவாயுஎரிபொருள் போன்றவற்றை கொள்வனவு செய்வதற்கான டொலர்கள் முடிவடைந்துள்ளதால் இந்தியா எரிவாயு மற்றும் டீசலை வழங்குவதை நிறுத்தியுள்ளது,இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் பணத்தை வழங்கும்வரை சில கப்பல்களை அனுப்புவதை இந்தியா தாமதித்துள்ளது என தங்களை அடையாளம் காட்டவேண்டாம் என தெரிவித்த இந்திய அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
முன்கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதை உறுதி செய்வதற்காக இந்திய அரசாங்கத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு கூட்டுத்தாபனத்தின் நாலு எரிபொருள் கப்பல்கள் காத்திருப்பது அமைச்சர் காஞ்சனவிஜயசேகர வெளியிட்ட டுவிட்டர் பதிவின் மூலம் தெரியவந்துள்ளது.
அந்நிய செலாவணி கையிருப்பு முற்றாக முடிவடைந்த நிலையில் உள்ள இலங்கை எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக இந்தியாவின் புதிய கடன்உதவியை 500 மில்லியன் டொலர் எதிர்பார்த்துள்ளது.
கட்டாரிடமிருந்து எண்ணையை கொள்வனவு செய்வதற்காக இலங்கை தனது பிரதிநிதிகளை அந்த நாட்டிற்கு அனுப்பியுள்ளது,ரஸ்யாவிடமிருந்தும் அது எண்ணையை பெற முயல்கின்றது.
இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் இது குறித்து உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை.
மார்ச் முதல் ஜூன்வரையான காலப்பகுதியில் 450,000 தொன் எரிபொருட்களை இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு வழங்கியுள்ளதாக இந்திய எண்ணெய் கூட்டுத்தாபன பேச்சாளர் தெரிவித்துள்ளார்.