நாட்டில் மரக்கறிகளின் மொத்த விலை 30 சதவீதம் வரையில் குறைந்துள்ளதாக தம்புள்ளை மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
கரட் தவிர்ந்த அனைத்து மரக்கறிகளின் விலையும் இவ்வாறு குறைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மொத்த விற்பனை வரவும் குறைந்துள்ளது

நேற்றைய தினம் சுமார் 06 இலட்சம் கிலோ மரக்கறிகள் மொத்த சந்தைக்கு கிடைத்துள்ளதுடன் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் மொத்த விற்பனை வரவும் குறைந்துள்ளது.
மற்ற காய்கறிகளின் மொத்த விலை 30 சதவீதமும், கெக்கிரி, வெள்ளரி மொத்த விலை 100 சதவீதமும் குறைந்துள்ளதாக மொத்த வியாபாரிகள் தெரிவித்தனர்.