இந்தியாவுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை தோல்விக்கு மேத்யூஸூம் ஒரு காரணம் என இலங்கை அணித் தலைவர் தினேஷ் சந்திமால் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு பின்னர் இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இலங்கை அணித் தலைவர் சந்திமால் கூறியதாவது, இலங்கை அணியில் இடம்பெற்ற ஒரே ஒரு வேகப்பந்து வீச்சாளரான நுவன் பிரதீப் காயமடைந்து வெளியேறியது அணியில் சிக்கலை ஏற்படுத்தியது.
இலங்கை அணிக்கு வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் இல்லாத நிலையை ஏற்படுத்தியது. அதனை சரிசெய்ய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்ன ஒரு சில ஓவர்கள் மிதவேகப்பந்து வீசவேண்டி ஏற்பட்டது.
இந்நிலையில், மேத்யூஸ் பந்துவீசாதது இலங்கை அணிக்கு மிகப் பெரிய இழப்பு என்று இலங்கை அணித் தலைவர் தினேஷ் சந்திமால் குறிப்பிட்டுள்ளார்.
தனது காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக சுகம் பெறாத மேத்யூஸ் பந்து வீசுவதற்கு இன்னும் தயாராகவில்லை. அவர் பந்துவீசக்கூடாது என்று இலங்கை அணி உடற்பயிற்சியாளர் ஆலோசனை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.