இலங்கை தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்திற்கு இந்திய அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
எதிர்வரும் செவ்வாய்கிழமை இலங்கைநெருக்கடி தொடர்பான அனைத்துகட்சி கூட்டத்திற்கு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது என நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரஹ்லாட் ஜோசி தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வுகளிற்கு முன்னதாக இடம்பெற்ற சம்பிரதாயப்பூர்வமான அனைத்து கட்சி கூட்டத்தின் பின்னரே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு இந்தியா தலையிடவேண்டும் என தி.மு.கவும் அ.தி.மு.கவும் வேண்டுகோள் விடுத்துள்ளன.
இரு கட்சிகள் இலங்கை நிலவரம் குறித்து குறிப்பாக தமிழர் நிலைமை குறித்து கரிசனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.