இலங்கை தனி ஒரு இனத்துக்கு மட்டும் சொந்தமானதல்ல என்ற உண்மையை தாம் வெளிக்கொண்டு வந்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர்:
இலங்கையில் பல இனங்கள் வாழ்கின்றார்கள் என்ற பன்மை தன்மையை அனைவரும் ஏற்றுக்கொள்வதில்தான் இலங்கையின் எதிர்காலம் தங்கியுள்ளது.
இலங்கை மக்கள் என்ற நூல் தேசிய கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சினால் உருவாக்கப்பட்டு, அரச தலைவர்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளது.
முன்பு பாட நூல்களில் இருந்த சரித்திர உண்மைகள் இப்போது இல்லை. அவை அகற்றப்பட்டு வரலாறு திரிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மக்கள் என்ற நூலின் மூலம் மறைக்கப்பட்ட இத்தகைய சரித்திர உண்மைகளை எடுத்து கூறி, அது அதிகாரபூர்வமாக செய்துகாட்டப்பட்டுள்ளது ‘ என தெரிவித்துள்ளார்.