இலங்கை கிரிக்கெட் நட்சத்திரம் நுவான் குலசேகர கைது!
இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவான் குலசேகர அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பாகவே 34 வயதான குலசேகர கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குலசேகரவின் கார் பைக் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் பைக்கில் வந்த 28 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக பொலிசாரால் கைது செய்யப்பட்ட குலசேகர பின் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.