இலங்கை கடற்படையினரால் தலைமன்னார் வடக்கு கடற்பகுதியில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது, இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 12 இந்திய மீனவர்களை 02 இந்திய இழுவை படகுகளுடன் கைது செய்துள்ளனர்..
இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடிக்கும் வெளிநாட்டு மீனவர்களால் உள்ளூர் மீனவ சமூகம் மற்றும் இலங்கையின் மீன்பிடி வளங்களின் நிலைத்தன்மை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுக்க இலங்கை கடற்படை வழக்கமான ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், வடமத்திய கடற்படை கட்டளையானது தலைமன்னாருக்கு வடக்கே உள்ள கடற்பகுதியில் நேற்று இரவு 4 சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டு வந்த இந்த 02 இந்திய இழுவை படகுகளையும் கைப்பற்றியது.
சர்வதேச கடல் எல்லைக் கோடு (IMBL) வழியாக இலங்கை கடற்பரப்பில். அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 12 இந்திய மீனவர்களையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இதையடுத்து கைது செய்யப்ட்ட இந்திய படகுகளையும்,மீனவர்களையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளனர்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]