இலங்கை பங்களாதேஷ் மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு ஜப்பான் அரசு கடுமையான விதிமுறைகளை விதித்துள்ளது.
இந்தியாவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் நாட்டில் பரவாமல் தடுக்கவே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஜப்பான் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கடுமையான எல்லைக் கட்டுப்பாடு வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.
அதன்படி, நாட்டில் வசிக்கும் அந்தஸ்துள்ள வெளிநாட்டினர் மற்றும் பங்களாதேஷ் மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்தவர்கள் விசேட சூழ்நிலைகளில் அனுமதி வழங்கப்படாவிட்டால் அவர்களுக்கு நாட்டிற்குள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை, பங்களாதேஷ் மற்றும் மாலைத்தீவு ஆகிய மூன்று நாடுகளிலிருந்து வரும் ஜப்பானிய நாட்டினரும், ஜப்பானில் வசிக்கும் அந்தஸ்துள்ள வெளிநாட்டினரும் ஆறு நாட்கள் தரையிறங்கியவுடன் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும்.
மேலும், தனிமைப்படுத்தல் காலத்தில் மூன்றாவது மற்றும் கடைசி நாளில் கொரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டும்.