Facebook நிறுவனம் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுக்கு சோதனை யோட்டம் மேற்கொண்டிருந்தது.
இது தொடர்பில் அநேகமானோர் கவனம் செலுத்தியிருந்தனர்.
அதாவது , Facebook News Feed க்கு மேலதிகமாக Explore Feed எனும் பதம் இணைக்கப்பட்டு அது கடந்த ஒக்டோபர் மாதம் முதல் சோதனைக்கு விடப்பட்டது.
இதன்மூலம் , சில page பதிவுகளை காணவேண்டும் என்னால் நீங்கள் இந்த Explore Feed ஊடாக காணவேண்டியிருந்தது.
இந்த செயன்முறை இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளில் மாத்திரமே சோதனைக்கு விடப்பட்டது.
இலங்கை , பொலீவியா , காம்போடியா , கோதமாலா , சர்பியா , ஸ்லோவேகியா ஆகிய நாடுகளுக்கே இந்த Explore Feed முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
எவ்வாறாயினும் ,கடந்த சில மாதங்களாக இந்த Explore Feed முறை சோதனைக்கு விடப்பட்டிருந்த போதும் , அது நினைத்த அளவிற்கு வெற்றி அளிக்காததால் குறித்த செயன்முறையை பேஸ்புக்கில் இருந்து அகற்ற பேஸ்புக் நிறுவனம் தீர்மானித்துள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.