இலங்கை உட்பட 4 நாடுகளில் வேற்று கிரகவாசிகள் தொடர்பில் ஆய்வு
இலங்கை, இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
மேற்கத்திய சித்தாந்தமாக கருதப்படும் ஆசிய கண்டுபிடிப்புகளுக்கு தலை வணங்கும் நிலை மேற்கத்திய விஞ்ஞானிகள் விரைவில் ஏற்படும் என, நவீன வானவியல் உயிரியல் தந்தையாக கருதப்படும் பேராசிரியர் சந்ரா விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதற்கு காரணமாக படைப்பாளர்களின் மத ரீதியான கருத்துகளுக்கு அடிமையாகியுள்ள மேற்கத்திய விஞ்ஞானிகள், பூமிக்கு அப்பால் உயிரினங்கள் உள்ளன என்பதனை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை என பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் இன பாரபட்சத்தை காரணமாக கொண்டு மேற்கத்திய விஞ்ஞானிகள் ஆசிய கருத்திற்கு எதிராகும் போக்கினை கொண்டுள்ளனர்.
எனினும் இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் பௌத்தம் மற்றும் மதங்கள் மீது ஈர்ப்பு கொண்டு நாடுகள். எனவே அந்த நாடுகளின் விஞ்ஞானிகளிடம் உள்ள பரந்த சிந்தனையை சுதந்திர கருத்தின் ஊடாக பிரபஞ்சத்தை நோக்கி பார்ப்பதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தும். வேற்றுகிரக வாசிகள் வாழ்கின்றதா என்பது தொடர்பில் பரந்த மனதுடனான ஆய்வினை மேற்கொள்ளவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.