கனடாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சமாதான இராணுவ கூட்டத்திற்கு செல்லும் இலங்கை இராணுவ அதிகாரிகள் குழுவுக்கு அந்நாட்டுக்குள் பிரவேசிக்க இடமளிக்க வேண்டாம் என தெரிவித்து கனடாவிலுள்ள புலி ஆதரவாளர் அமைப்புக்கள் 11 இணைந்து அந்நாட்டு பிரதமர் ஜஸ்மின் டுரூடோவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளன.
இருப்பினும், இந்த வேண்டுகோளுக்கு கனடா பிரதமர் இதுவரை எந்தப் பதிலும் அளிக்கவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மாநாடு எதிர்வரும் 14 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்த வேண்டுகோளை விடுத்துள்ள அமைப்புக்களில் இலங்கை அரசாங்கத்தினால் தடை நீக்கம் செய்யப்பட்டுள்ள இரு அமைப்புக்களும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை இராணுவத்தினர் யுத்தக் குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் என்பது இவ்வமைப்புக்களின் குற்றச்சாட்டாகும்.