பன்னாட்டு சட்டங்களின் மாற்றங்கள் ஊடாக இலங்கை அரசை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றில் நிறுத்து வதற்கான அழுத்தங்களை நாம் பிரயோகிக்க வேண்டும். அது உடனடியாகச் சாத்தியப்படும் விடயமல்ல. அதைச் செய்ய நீண்டகாலம் எடுக்கும். ஆனால் நாம் அதைச் செய்ய முயற்சிக்க வேண்டும்.
இவ்வாறு சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகச் சட்டத்துறைப் பேராசிரியர் மு.சொர்ணராஜா தெரிவித்தார்.
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் “இடைக்கால அறிக்கை – மாயைகளை கட்டுடைத்தல்” என்ற கருத்தாடல் நிகழ்வு நேற்று நடைபெற்றது. அதில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தெரிவித்தாவது-,
இலங்கையில் உள்ள சட்டங்களில் அதிகமானவை தமிழர்களை வெகுவாக பாதிக்கும் வகையிலேயே அமைந்துள்ளன. அவை தமிழர்களுக்கு கொடுமை இழைக்கும் வகையில் உள்ளன. ஆரம்பகாலம் முதல் இந்த நிலைமையில் மாற்றம் இல்லை.