இலங்கை அணி மீதான தாக்குதல்: முக்கிய பயங்கரவாதி சுட்டுக்கொலை
பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் அணி மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாத குழுவிற்கு மூளையாக செயல்பட்ட குற்றவாளி ஆப்கானிஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த 2009ம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டது.
அப்போது கடாபி மைதானத்திற்கு அணி வீரர்கள் சென்று கொண்டிருந்த வேளையில் ஆயுதம் ஏந்திய 10 பேர் கொண்ட தீவிரவாத குழு தாக்குதல் நடத்தியது.
இந்த சம்பவத்தின் போது 6 வீரர்கள் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இதனையடுத்து இதுவரை எந்த அணியும் பாகிஸ்தானுக்கு சென்று விளையாடுவதில்லை.
இந்த நிலையில் இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி குஹாரி அஜ்மல் ஆப்கானிஸ்தானில் வைத்து கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் இராணுவமும் நேட்டோ படையும் மேற்கொண்ட தேடுதல் வேட்டையின் போது அவன் சுட்டுக்கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது