2021 ஐ.சி.சி. ஆண்களுக்கான டி-20 உலகக் கிண்ணத்தின் அரையிறுதிக்கு தகுதிபெற வேண்டுமானால், குழு 1 இல் இலங்கை தனது கடைசி இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற வேண்டும்.
இதுவரை மூன்று ஆட்டங்களில் விளையாடியுள்ள இலங்கை அணி -0.350 என்ற நிகர ஓட்ட விகிதத்துடன் இரண்டு புள்ளிகளைப் பெற்றுள்ளது.
மீதமுள்ள போட்டிகளில் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணியை சந்திக்கவுள்ளது.
அரையிறுதிச் சுற்றுக்கு இலங்கை முன்னேறுவதற்கான மேலும் பல சாத்தியக்கூறுகள்;
- இங்கிலாந்து இலங்கையிடம் வீழ்ந்து தென்னாபிரிக்காவை வீழ்த்த வேண்டும்.
- மேற்கிந்திய தீவுகள் மற்றும் பங்காளதேசத்திற்கு எதிராக மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் அவுஸ்திரேலியா தோல்வியடைய வேண்டும்.
- தென்னாபிரிக்கா பங்களாதேஷ் மற்றும் இங்கிலாந்திடம் தோல்வியடைய வேண்டும்.
- பங்களாதேஷ் அவுஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்காவை வீழ்த்த வேண்டும்.
- மேற்கிந்திய தீவுகள் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி இலங்கையிடம் தோற்க வேண்டும்.
இவை அனைத்தும் நடந்தால், ரன் ரேட் வராமல் இலங்கை அரையிறுதிக்கு முன்னேற முடியும்.