இலங்கை அகதிகள் 44 பேரை திருப்பி அனுப்ப இந்தோனேஷியா தீர்மானம்
கடந்த சனிக்கிழமை இலங்கையில் இருந்து சென்ற 44 அகதிகள், தாம் சென்ற படகில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக இந்தோனேஷியாவில் தவித்துக் கொண்டிருந்த நிலையில் அவர்களை மீண்டும் அவுஸ்திரேலியாவிற்கு அனுப்பி வைக்க இந்தோனேஷிய அதிகாரிகள் தீர்மானம் எடுத்திருப்பதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இவர்கள் சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முற்பட்டுள்ளதாக லோக்ங்க (Lhoknga) மாவட்ட இராணுவத் தலைமை அதிகாரி தாருல் அமிக் தெரிவித்துள்ளார்.
குறித்த படகை சோதனைக்குட்படுத்திய போது முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி தாய் ஒருவர் இருந்ததாகவும், தகுந்த பயணச்சீட்டுகள் கூட இவர்களிடம் இல்லை எனவும் கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையர்கள் இந்தோனேஷிய அதிகாரியிடம் இருந்து 7000 லீற்றர் டீசல் கேட்டதாகவும், இந்நிலையில் காலநிலை கூட மோசமாக இருந்ததாகவும், ஆனால் அவர்களால் அவ்வளவு பெரிய தொகை கொடுக்க முடியவில்லை என்றும் அவர்கள் கூறினர்.
அதிகாரிகள் 1000 லீட்டர் தருவதாக கூறினார்கள், ஆனால் இலங்கையர்கள் அதை நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
படகில் இருந்து தரையிறக்குவதற்காக குடிவரவு அதிகாரிகளின் அனுமதி வழங்காமையினால் இவர்களின் படகில் உள்ள இயந்திரம் திருத்தப்பட்டு இவர்களை மீண்டும் அவுஸ்திரேலியாவிற்கு திருப்பி அனுப்பியுள்ளதாக இராணுவத் தலைமை அதிகாரி தாருல் அமிக் கூறியுள்ளார்.