இலங்கை அகதிகளை அனுப்ப வேண்டாம் – இந்தோனசியாவுக்கு அவுஸ்திரேலியா அழுத்தம்
இந்தோனேசியாவில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகளை தமது நாட்டுக்கு அனுப்ப வேண்டாம் என்று அவுஸ்திரேலிய அரசு இந்தோனிசியாவுக்கு அழுத்தம் கொடுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜகார்த்தா போஸ்ட் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
தமிழ் நாட்டில் இருந்து 44 அகதிகளுடன் அவுஸ்திரேலியாவுக்கு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் சென்ற படகு இந்தோனேசியாவின் அச்சே மாகாணத்தில் பழுதடைந்த நிலையில் கரையொதுங்கியது.
இதில் பயணித்த 44 பேரும் தற்போது UNHCR அதிகாரிகளால் விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையிலேயே அவுஸ்திரேலியா, இந்தோனிசியாவுக்கு மறைமுக அழுத்தங்களை கொடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.