இலங்கையை புரட்டியெடுத்த மேஸ்வெல் தான் தற்போது நம்பர்-1..!
இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் அதிரடி காட்டிய அவுஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் ஐசிசி டி20 ஆல்ரவுண்டர் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது.
இதில் முதல் டி20 போட்டியில் 145 ஓட்டங்கள் விளாசி அணிக்கு சாதனை வெற்றியைத் தேடித்தந்த மேக்ஸ்வெல், 2வது போட்டியிலும் 66 ஓட்டங்கள் அடித்து அவுஸ்திரேலிய அணியை வெற்றி பெற வைத்தார்.
இதனால் அவுஸ்திரேலிய அணி 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என முழுமையாக கைப்பற்றியது.
இந்நிலையில் இன்று வெளியிடப்பட்ட ஐசிசியின் டி20 ஆல்ரவுண்டர் தரவரிசைப் பட்டியலில் 388 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார் மேக்ஸ்வெல். சாஹிப் அல் ஹசன், அப்ரிடி, சாமுவேல்ஸ் ஆகியோர்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
இதே போல் டி20 போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசைப் பட்டியலிலும் மேக்ஸ்வெல் முன்னேற்றம் கண்டுள்ளார். அவர் 16 இடங்கள் முன்னேறி 3வது இடத்தை பிடித்துள்ளார்.
இந்தப் பட்டியலில் விராட் கோஹ்லி முதலிடத்திலும், ஆரோன் பிஞ்ச் 2வது இடத்திலும் உள்ளனர்.