இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான கடைசி ஒரு நாள் போட்டியில் பங்களாதேஷ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதன்படி 03 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் பங்களாதேஷ் அணி கைப்பற்றியது.
இன்றைய (18) போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியால் 50 ஓவர்கள் நிறைவில் 235 ஓட்டங்களை மாத்திரமே எடுக்க முடிந்தது.
இலங்கை அணியில் அதிகபட்சமாக ஜனித் லியனகே ஆட்டமிழக்காமல் 101 ரன்கள் எடுத்தார்.
அணித்தலைவர் குசல் மெண்டிஸ் 29 ஓட்டங்களையும் சரித் நசங்க 37 ஓட்டங்களையும் பெற்றனர்.
பங்களாதேஷ் பந்துவீச்சில் தஸ்கின் அஹமட் 03 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பங்களாதேஷ் அணி வீரர்கள் 40.2 ஓவர்களில் வெற்றி பெற்றது.
அங்கு தன்சித் ஹசன் 84 ஓட்டங்களையும், முஸ்பிகுர் ரஹிம் ஆட்டமிழக்காமல் 37 ஓட்டங்களையும் பெற்றனர்.
ரிஷாத் ஹொசைன் 18 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 48 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக லஹிரு குமார 04 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.