காலியில் நடைபெற்று வரும் இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், பந்து தாக்கியதில் உபாதைக்கு உள்ளான மேற்கிந்தியத்தீவுகள் அணி வீரர் ஜெர்மி சோலோசானோ அம்பியூலன்ஸின் உதவியுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
போட்டியில் 24 ஆவது ஓவருக்காக ரோஸ்டன் சேஸ் பந்துப் பரிமாற்றம் மேற்கொண்டார்.
அந்த ஓவரின் நான்காவது பந்து வீச்சினை திமுத் கருணாரத்ன ஓங்கி அடித்தார். அந்த பந்து பிட்ச்சுக்கு அருகிலிருந்த வகையில் களடுத்தடுப்பில் ஈடுபட்ட 26 வயதுடைய மேற்கிந்தியத்தீவுகள் அணியின் அறிமுக வீரரான ஜெர்மி சோலோசானோவின் தலைக் கவசத்தை வேகமாக தாக்கியது.
இதனால் ஜெர்மி சோலோசானோ மைதானத்தில் சுருண்டு வீழ்ந்ததுடன், தொடர்ந்து ஸ்ட்ரெச்சர் மூலம் மைதான வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அம்பியூலன்ஸுக்கு அழைத்து செல்லப்பட்டு பின்னர் ஸ்கேன் பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
போட்டியில் மதிய நேர உணவு இடைவேளை வரை இலங்கை அணியி விக்கெட் இழப்பின்றி 61 ஓட்டங்களை குவித்துள்ளது.
திமுத் கருணாரத்ன 32 ஓட்டங்களையும், பதும் நிஸ்ஸாங்க 25 ஓட்டங்கயைும் பெற்றுள்ளனர்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]