இலங்கையில் 490 ஆவது பொலிஸ்நிலையம் கிளிநொச்சி அக்கராயன் பகுதியில் இன்று திறந்து வைக்கப்பட்டது.
வடமாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொசான் பெர்னாண்டோ, கிளிநொச்சி முல்லைத்தீவுக்கான பிரதிப்பொலிஸ்மா அதிபர் மகேஷ் வெலிகன்ன மற்றும் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் கணேசநாதன் ஆகியோர் இணைந்து நிலையத்தைத் திறந்து வைத்தனர்.
பொலிஸ் காவலரானாக இயங்கி வந்த இந்தக் காவலரன் மிகவும் சிறப்பாக இயங்கியமையால் பொலிஸ் நிலையமாக தரம் உயர்த்தப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.