இலங்கையில் 14 வயதுக்குட்பட்ட 10 சதவீதமான குழந்தைகள் தொழுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொழுநோய் தடுப்புப் பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் தொழுநோய் எதிர்ப்பு பிரச்சாரத்தின் பணிப்பாளர் பிரசாத் ரணவீர கருத்து தெரிவிக்கையில்,
தொழுநோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைக் கொண்ட அபிவிருத்தியடைந்து வரும் நாட்டில் குழந்தை தொழுநோயாளிகளின் சதவீதம் குறைந்தது 4 சதவீதமாக இருத்தல் அவசியம்.
இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் மாத்திரம் இலங்கையில் சுமார் ஆயிரத்து 155 தொழுநோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
இந்நோய் தொற்றில் 5 அல்லது 6 ஆண்டுகளுக்கு பிறகே நோயின் அறிகுறிகள் தோன்றும் இதனால் தோல், நரம்பு, மேல் மூச்சு மண்டலம் பாதிக்கப்படும்.
இலங்கையில் இதன் அதிகரிப்பை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுப்பது அவசியம் என அவர் வலியுறுத்தினார்.