இவ்வாண்டு டொலருக்கு எதிரான ரூபாவின் மதிப்பு இரண்டு தசம் ஒன்பது சதவீதத்தால் குறைந்த போதிலும், உலகின் ஏனைய நாணயங்களும் பெருமளவில் மதிப்பிறக்கம் கண்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
டொலருக்கு எதிரான இந்திய ரூபாவின் பெறுமதி நான்கு தசம் எட்டு சதவீதத்தால் குறைந்திருக்கிறது.
பிலிப்பின்ஸ் நாணயத்தின் பெறுமதி நான்கு தசம் நான்கு சதவீதத்தாலும், இந்தோனேஷிய நாணயத்தின் பெறுமதி இரண்டு தசம் நான்கு சதவீதத்தாலும் மதிப்பிறக்கம் கண்டதாக ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி குறிப்பிட்டுள்ளார்.
வருடாந்த அறிக்கையை வெளியிடும் நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.